பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - தனியார் போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
தொழிற்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே போக்குவரத்துக்கு நாளைய தினம் எவ்வித இடையூறும் ஏற்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து சேவை வழமைக்கு
அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கான உறுதியான தீர்வுகள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வைக்கொடுக்காத அரசாங்கம்
இந்த நிலையில், நாளைய தினம் சகல மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
