இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு கிடைத்தது அனுமதி
விதுர விக்கிரமநாயக்க வழங்கிய அனுமதி
இந்த வருடம் இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரிகைக்கு அனுப்ப மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.
சவுதி அரேபிய அரசாங்கம் 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையிலிருந்து 1585 ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஹஜ் சுற்றுலா நடத்துவோர் சங்கங்களுடனான சந்திப்பின் போது, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்கிரமநாயக்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான கட்டணமாக நியாயமான தொகையை வசூலிக்குமாறு சுற்றுலா நடத்துபவர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
ஹஜ் யாத்திரையின் நோக்கத்திற்காக வெளிநாட்டில் இருந்து 1,500/- அமெரிக்க டொலர்களை இலங்கையில் நியமிக்கப்பட்ட அமெரிக்க டொலர் கணக்கிற்கு மாற்றுவது ஒரு தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் ஈடுபட ஆர்வமுள்ள இலங்கையர்கள் 2022 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னர் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

