இந்தியா சென்ற அகதிகளை அழைத்து வர புதிய குழுவை நியமித்த ரணில்!
Ranil Wickremesinghe
Sri Lanka
India
By pavan
விசேட குழு
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிபர் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட குழுவானது அதிபரின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

