அவுஸ்திரேலியாவில் பாரிய பணமோசடி இலங்கையர் அதிரடி கைது
Sri Lanka
Australia
Money
By Sumithiran
2 மாதங்கள் முன்
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக பத்து சர்வதேச வீரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தனது முதலாளியின் கணக்கிலிருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
35 வயதான சந்தேகநபர் மீது மெல்பேர்ன் காவல்துறையினரால் 19 திருட்டு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர் நேற்று (29) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்து மோசடி
போலி ஆவணங்களை தயாரித்து முதலாளியின் கணக்கில் இருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளதாக காவல்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

