இலங்கை வரலாற்றின் மிகப்பெரிய சூப்பர் பரிசு - கோடிகளை அள்ளிய அதிர்ஷ்டசாலி
Central Bank of Sri Lanka
Sri Lanka
Lottery
Economy of Sri Lanka
By Thulsi
இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணப்பரிசை வென்ற நபருக்கு அதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தேசிய லொத்தர் சபையின் (National Lotteries Board) மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 (47 கோடி) சூப்பர் பரிசு வெல்லப்பட்டுள்ளது.
மெகா சூப்பர் பரிசு வெற்றவருக்கான காசோலையை தேசிய லொத்தர் சபை நேற்று வழங்கி வைத்தது.
மிகப்பெரிய சூப்பர் பரிசு
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை கொகரெல்ல பகுதியை சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.
இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் இதுவரை வென்ற மிகப்பெரிய சூப்பர் பரிசு இதுவாகும்.
இதேவேளை, முன்னதாக லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசாக 230 மில்லியன் ரூபாய் பரிசு வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி