புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் புள்ளி விபரங்களுடன் சிறீதரனை நோக்கி கேள்விகளை சரமாரியாக முன்வைத்த அர்ச்சுனா இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததன் பின்ணனியில் அன்றைய காலம் முதல் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்கு சிறீதரன் திருப்திகரமான பதில் வழங்காமல் சுற்றிவளைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்