சுயநல அரசியலை நகர்த்த நான் களமிறங்கவில்லை: அரியநேந்திரன் சுட்டிக்காட்டு
தென்னிலங்கை வேட்பாளர்களை போல நான் சுயநல போக்குடன் வாக்கு கேட்கவில்லை நான் நம் தமிழ் இனத்தை முன்னிருத்தி வாக்கு கேட்கின்றேன் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (13) மன்னாரில் (Mannar) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் இனம் இன்று மட்டிலும் விடிவு பெறவில்லை, விடுதலைக்காக போராடி மாண்டு இருக்கின்றார்கள்.
இரண்டாம் வாக்கு
இதுவரை காலமும் வந்த அரசியல்வாதிகளால் நாம் ஏமாற்றப்பட்டே கொண்டிருக்கின்றோம்.
பொது வேட்பாளர்களுக்கு முதல் வாக்கு ஏணைய வேட்பாளர்களுக்கு இரண்டாம் வாக்குகளை அளியுங்கள் என பிரச்சாரம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம், நாங்கள் எவரையும் ஆதரிக்க தயாராக இல்லை எல்லோரும் எங்கள் பண்பாட்டு தேசியத்தை கலைத்தவர்கள்.
ஆகையால், நீங்கள் அளிக்கும் வாக்கு சங்கு சின்னத்திற்கு என்பதை மனதில் வைத்துகொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்