தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்!
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
By pavan
மகனின் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகிய தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மஹஓயா, ஹிகுராலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தாக்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிர் உயிரிழந்துள்ளார் என்று மஹஓயா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில்
கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து தந்தையை மகன் கொடூரமாக தாக்கியதாகவும், தாக்குலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
