நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸிற்கு மன்னர் பொது வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த வேண்டுகோள்
Mannar
Sri Lanka Politician
Charles Nirmalanathan
By Dharu
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று காலை (12-11-2022) இந்த கண்காணிப்பு மேற்கொண்டுண்டிருந்தார்.
மேலும், இதன் போது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை
இதன் போது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கலந்துரையாடிய அவர் தற்போது வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.
மேலும் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசிய தேவைகள் குறித்தும் கலந்துரையாடிள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்