ரணிலின் உத்தரவுக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
New Gazette
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபரின் உத்தரவுக்கமைய அதிபரின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய அதிபருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்