சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை..! வெளியான புதிய விலைகள்
Colombo
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Dollars
By pavan
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் கேள்வி குறைந்தமையால் அதன் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமையே வாகனங்களின் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், உதிரி பாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணங்களாலும் விலை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு குறைந்துள்ளன.
- Vitz (2018) - 60 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
- Premio (2017) – 137 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்
- Aqua G (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
- Vezal (2014) – 63 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
- Fit (2012) - 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
- Graze (2014) - 70 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்
- X-trail (2014) – 85 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்
- Wagonr (2014) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
- Alto (2015) – 27 லட்சம் / முந்தைய விலை 34 லட்சம்
- Alto japan (2017) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
-
Panda (2015) 21 லட்சம் / முந்தைய விலை 25 லட்சம்
