கொழும்பு மாவட்டத்தின் நீர் விநியோகம் தடை
Colombo
Sri Lanka
Water Cut
By Dharu
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (10) காலை 10 மணிமுதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அத்துடன், கொலன்னாவ நகரசபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்