சிறிலங்கன் விமானங்கள் தொடர்பில் சபையில் அம்பலமான தகவல்
சிறிலங்கன் விமான சேவைக்கு (SriLankan Airlines) சொந்தமான மூன்று விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், அவற்றிற்காக மாதாந்தம் 9 இலட்சம் டொலர்கள் தவணைகளாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், “சிறிலங்கன் விமான சேவையிடம் மொத்தம் 22 விமானங்கள் உள்ளது.
ஐந்தாண்டு திட்டம்
தற்போது, பிரதான விமான சேவைக்கு 3,194 பணியாளர்களும், மூலோபாய வணிக அலகுகளில் 2,862 பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.
விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 முதல் ஐந்தாண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அமைச்சு ஆய்வு செய்து வருகின்றது.
அதன்படி, இந்த ஐந்து ஆண்டுகளில் விமான சேவையானது செயற்பாட்டு இலாபத்தையும் அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றது” என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
