மல்லாவி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - நோயாளிகள் அவதி!
Jaffna
Northern Province of Sri Lanka
By pavan
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புக்கு அமைய இன்று (14) முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளிலும் பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்றது
அதனடிப்படையில் மல்லாவி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றது.
நோயாளிகள் அவதி
இந்த நிலையில் வைத்தியசாலைக்கு வந்திருந்த நோயாளிகள் பலமணிநேரம் காத்திருந்த பின்னர் திரும்பி செல்ல வேண்டிய சூழல் காணப்பட்டது
அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த அனைத்தும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்