சிறீதரனின் அடுத்த நகர்வு: தமிழரசுக் கட்சிக்குள் நடப்பது இதுதான்!
அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் திட்டமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதரவளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் அவரை நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், அரசியல் குழுவின் ஆலோசனையை சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
அதன்போது, நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே சிறீதரனுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், “அவ்வாறு சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை” எனக் கூறியிருந்தார்.
தமிழர்கள் தரப்பில் முன்னிலைப்படுத்த பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் இருகின்ற நிலையில், சிறீதரனின் இந்த விவகாரத்தை தமிழ்க் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி முன்னிலைப்படுத்துவதன் பின்னணி என்ன? இது குறித்த ஆராய்கிறது ஐபிசி தமிழின் ஆயுதம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |