குறை கூறுவதை நிறுத்தி இதைச் செய்யுங்கள் - மக்களுக்கு எம்.பி வழங்கிய ஆலோசனை
மக்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்திவிட்டு தமது தோட்டங்களில் மரக்கறி வகைகளை பயிரிட ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வு காண்பது மிக முக்கியமான பணி என கம்மன்பில தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“நெருக்கடிக்கான காரணங்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தீர்வுகளைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமான பணியாகும்.
குறை கூறுவதை நிறுத்துங்கள்
இது ஒரு நிவாரணம்
Instead of accusing each other for the causes of the crisis, finding solutions is the most important task.
— Udaya Gammanpila (@UPGammanpila) October 22, 2022
If we can grow vegetables, sprouts, and fruits as much as possible in our gardens, it is a relief for you and the country in the midst of this economic crisis.#PHU pic.twitter.com/7oTUs6GZqH
எங்கள் தோட்டங்களில் காய்கறிகள், மற்றும் பழங்களை முடிந்தவரை பயிரிட முடிந்தால், இந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உங்களுக்கும் நாட்டிற்கும் இது ஒரு நிவாரணம், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
சுயேச்சை எம்பி தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளின் படங்களையும் பதிவிட்டுள்ளார்
