பாடசாலைக்குள் நுழைந்து மதம் மாற்ற முயற்சி !!திடீர்ப் போராட்டத்தில் குதித்த இந்து குருமார்!!
இலங்கையில் இருக்கின்ற கிறிஸ்தவ சம்மேளனத்தின் மாநாட்டை கண்டித்து கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலை 3 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பாடசாலை ஒன்றில் குறித்த எழுப்புதல் நிகழ்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
உடனே கைது செய்
இதன்போது சில கிறிஸ்தவ மத போதகர்களினால் இந்து மதம் தொடர்பாக தரக்குறைவான இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் அவை பரப்பப்படுவதாகவும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தே இந்து குருமார்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில குழுவினரால் மதமாற்ற நடவடிக்கை இடம் பெறுவதாகவும் இதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"இந்து தெய்வங்களை இழிவு படுத்தியவர்களை உடனே கைது செய்", "கட்டாய மதமாற்றத்தை உடன் நிறுத்து", "மத ஒற்றுமையை சீர்குலைக்காதே" என பல வாசகங்களுடன் போராட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
