காட்டு யானை தாக்கியதில் மாணவி படுகாயம்
காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெகலேவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மெகலேவ மகாவலி தேசிய பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் பன்னிரண்டு வயது சிறுமியே இவ்வாறு காயமடைந்தவராவார்.
இந்த மாணவி தினமும் இரவு பாட்டியின் வீட்டிற்கு தனியாக சென்று அவருடன் ஒரே படுக்கையில் உறங்குவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது
சிறுமி தனது பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இரவு பத்து பதினோரு மணியளவில் ஒற்றை யானை வந்து அவர்கள் படுத்திருந்த அறையின் வெளிப்புறச் சுவரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் உடல் மீது சுவரின் இடிபாடுகள் விழுந்து படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சிறுமி மற்றும் பாட்டியின் அலறல் மற்றும் சுவர் இடிந்து விழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து யானையை விரட்டியதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
