பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் மாணவர்கள் கைது
வர்த்தக நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முயன்ற பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு மாணவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15-16 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு அறிவித்த வர்த்தகர்
குறித்த நான்கு மாணவர்களும் திகன பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் போலியானது என உணர்ந்த வர்த்தகர் இது தொடர்பில் தெல்தெனிய காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
57 போலி நாணய தாள்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களிடம் 5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தெரிந்த மாமா ஒருவர் பொருட்களை வாங்க இந்த நோட்டுகளை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |