அதிபரை மிரட்டி சகமாணவரை குத்திய மாணவர்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
நவகத்தகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினோராம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், அதே வருடத்தில் கற்றும் மாணவர் ஒருவரின் வயிற்றில் இரும்புக் குழாயால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மாணவன் நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பழைய முன்விரோதம்
பழைய முன்விரோதம் காரணமாக மாணவர் மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மோதல் இடம்பெற்ற மலசலகூடத்திற்கு அதிபரும் பிரதி அதிபரும் சென்று சமரசம் செய்ய முற்பட்ட போது மாணவர் ஒருவர் அதிபரின் சட்டை கொலரைப் பிடித்து மிரட்டியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தலைமை ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்