திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: அமெரிக்க நகரமொன்றில் பதற்றம்
United States of America
World
By Dilakshan
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் தீடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே நடத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.
அத்தோடு, தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 வயது வரை இருக்கும் என்றும் பெருநகர காவல்துறை துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்