அவசர கால விசா குறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட தகவல்!
சுவிட்சர்லாந்து அரசு, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அவசர கால விசா வழங்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.
துருக்கி நாட்டவர்களுக்காக ஒரு விசா திட்டம் 50,000 உயிர்களை பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் குடும்பத்தினரைக் கொண்ட துருக்கி நாட்டவர்கள், சுவிட்சர்லாந்துக்கு வந்து, தங்கியிருக்கும் வகையில் அவசர கால விசா திட்டம் ஒன்றை சுவிஸ் அரசு உருவாக்கியிருந்தது.
இந்நிலையில், பெடரல் கவுன்சிலரான Elisabeth Baume-Schneider, அந்த திட்டத்தை அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரம் முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
வாழ்வதற்கு வீடில்லை
ஆனால், துருக்கியில் இன்னமும் நிலைமை மோசமாகத்தான் உள்ளது என்று கூறும் சில அரசியல்வாதிகள், திரும்பிப்போனால் வாழ்வதற்கு இன்னமும் பலருக்கு வீடில்லை என்று கூறியுள்ளார்கள்.
