பொது வேட்பாளரை முன்னிறுத்தி நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுள்ளனர்! ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதி குற்றச்சாட்டு
பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்து இம்முறையும் நல்ல சந்தர்ப்பம் ஒன்றை நழுவ விட்டு உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அமைப்பாளர் ப. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(29) அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாக எமது ஜனாதிபதி வேட்பாளர் உறுதி வழங்கியுள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தினரை பாதுகாப்போம்...! அடித்துக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி வேட்பாளர்
மாகாண சபை ஊடாக வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதால் தமிழ் மக்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்கு வேண்டிய முக்கிய பணிகளை முன்னெடுப்பதற்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளேன்.
இதேவேளை கடந்த கால நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான கட்சியாக இருந்த தமிழரசு கட்சி ஜனாதிபதி மைத்திரிபாலவிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
பொது வேட்பாளர்
தற்போதுள்ள ஜனாதிபதி இடம் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ள படியினால் அவரது அடிமைகள் ஆகியுள்ளனர்.
இதில் சிதறியுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது வருமானத்திற்காக இந்த புது வேட்பாளர் என்ற வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் இது ஒரு தேவையற்ற விடயமாகும்.
வருகின்ற ஜனாதிபதியிடம் தங்களது வேண்டுகோள்களை முன்வைத்து மக்களுக்கு வேண்டிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வெல்லவிருக்கும் ஜனாதிபதியிடம் முன்வைத்து சமூக நலனுக்காக பாடுபடும்போது தமிழ் தரப்பினர் இந்த பொது வேட்பாளர் விடயத்தை முன்வைத்து இம்முறையும் நல்ல சந்தர்ப்பம் ஒன்றை நழுவ விட்டு உள்ளனர்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |