காணாமல் போனோர் என்ற வார்த்தையை வைத்துதான் அரசியல் சூடுபிடித்துள்ளது - உதயகலா
Jaffna
Sri Lankan political crisis
Northern Province of Sri Lanka
By Dharu
காணாமல் போனோர் என்ற வார்த்தையை வைத்துதான் அரசியல் மிகவும் சூடுபிடித்துள்ளது என சர்வமக்கள் கட்சியினுடைய தலைவர் ரீ .உதயகலா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியினுடைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பொதுவான அரசியல் என்பதையும் விட காணாமல் போனோர் என்ற வார்த்தையை வைத்துதான் அரசியல் மிகவும் சூடுபிடித்துள்ளது.
யுத்தத்தை வைத்து வியாபாரம்
அந்த வியாபாரத்தை அடிமையாக்க வேண்டும் அதுதான் எங்களுடைய நோக்கம். காணாமல் போன வயோதிபர்களை வைத்து போலி அரசியல் செய்கின்றனர்.
யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது இழுக்கான செயல் ஆகும்.
மேலும் எங்களுடைய கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது." என தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்