தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை

Sivasakthy Ananthan Sri Lanka India
By Vanan Oct 17, 2022 11:47 AM GMT
Report

இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து, நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு ஞயிற்றுக்கிழமை(16) மாலை மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

“அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்களும், தென்பகுதியிலே பல்வேறுபட்ட குழப்பங்களுடன் மிகவும் மோசமானதாகவும் இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டை கைவிடுவதாக இல்லை.

ஐ.நா சபையிலே இருக்கின்ற போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் போன்ற விடங்களை எப்படி நீத்துப் போகச் செய்யலாம், அல்லது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு இல்லாமல் செய்யலாம், வல்லரசுகள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றபோது, அந்த வல்லரசுகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றபோது இந்த அரசாங்கம் நாட்டின் சில பகுதிகளை சில வல்லரசுகளுக்கு விட்டுக் கொடுப்பதனூடாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகளை நீத்துக்போகத்தான் செய்கின்றார்கள்.

எங்களது கட்சியினால் கொண்டு வரப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கம்கூட எதிர்காலத்தில் எமது கையைவிட்டு நழுவிப்போகும் நிலமைதான் உள்ளது.

அதற்கான பேரம்பேசல்கள், அதற்காக வல்லரசுகளுக்கு சில இடங்களை தாரைவார்த்துக் கொடுத்து தமிழர்களுக்கு அதனை இல்லாமல் செய்யும், வேலைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

எனவே தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தமக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு 4 பில்லியன் நிதி உதவி செய்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கவேண்டும் என்பதை இந்திய அரசுக்கு தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் மாகாண சபை முறைமையும் கைநழுவிப்போகும்.

யுத்தம் முடிந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும், ஐ.நா மனித உரிமை பேரவையிலும்கூட போர்குற்றம், என்பன கைநழுவிப்போகின்ற நிலமை இருக்கின்றது.

எனவே நாம் அளப்பெரிய தியாகங்களை இந்த மண்ணிலே செய்திருக்கின்றோம். எமது கட்சியில் மாத்திரம் சுமார் 3000 இற்கு மேற்பட்ட தோழர்கள் உயிர் நீர்த்துள்ளார்கள். அதிகளவு போராளிகள், 150000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், பில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய காலம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi

இவைகளையெல்லம் கருத்திற்கொண்டு, தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக, இராஜதந்திர ரீதியாக, அறிவுபூர்வமதாகச் சிந்தித்து, பூகேள ரீதியான அரசியலையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது.

அதற்காக வெகுவிரைவிலே தமிழ் கட்சிகளுக்கிடையே ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

எனவே மக்களுடைய துயரங்களைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்” என்றார். 

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025