இனப்பிரச்சனைத் தீர்வு - மீண்டும் ரணிலை சந்திக்கவுள்ள தமிழ் அரசியல்வாதிகள்!
இனப்பிரச்சனைத் தீர்வு விடயம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரம் 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு வடக்கு - கிழக்கைப் பிரநிதித்துவம் செய்யும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவுள்ளனர்.
அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று அல்லது நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும் என அதிபர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்பிரச்சனைத் தீர்வு
11 ஆம் திகதி பொது பிரச்சனைகள் தொடர்பாகவும் 12 ஆம் திகதி அதிகார பகிர்வு தொடர்பாகவும் 13 ஆம் திகதி அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகள் முதல் இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் என்றும் இறுதி நாள் மாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
