தமிழர்கள் இனப்பிரச்சினை என எதை கருதுகிறார்கள் - மகிந்த தரப்பு ஏளனம்
இனப்பிரச்சினை
சிறிலங்காவில் இருக்கும் தமிழர்கள் இனப்பிரச்சினை என எதை கருதுகிறார்கள் எனவும் அவர்களுக்கு உண்மையில் இருக்கும் பிரச்சினை என்ன என்பது குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமென சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு நாடகம் என கொழும்பு ஊடகமொன்றுக்கு ரோஹித அபேகுணவர்த்தன தகவல் தெரிவித்துள்ளார்.
22 ஆவது திருத்தச் சட்டம்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மக்களை ஏமாற்றும் நாடகத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் எதிர்ப்பதால் குறித்த சட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு விவகாரத்தை வைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்படும் என எவரும் தப்பு கணக்கு போடக் கூடாது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்றும் அரசியல் எழுச்சியுடன் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
நாட்டில் தேர்தல் ஒன்று நடத்தப்படும் பட்சத்தில் அது நிரூபணமாக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்