ஏரியில் விழுந்தது பயணிகள் விமானம் -19 பேர் பலி பலர் மாயம் -தேடுதல் தீவிரம்
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்
மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமற் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.
மோசமான வானிலை
விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) நடுவானில் இருந்தபோது, அது சிக்கலை எதிர்கொண்டது, மோசமான வானிலை காரணமாக ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரி வில்லியம் மவாம்பகலே தெரிவித்திருந்தார்.
அதிபர் சாமியா சுலுஹு ஹசன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.மீட்புப் பணிகள் தொடர்வதால் அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
