பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடித்தல் : கிளம்பியுள்ள எதிர்ப்பு!
2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர், அதிபர்கள் சங்கங்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளன.
அத்துடன் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.
கல்வி சீர்திருத்தங்கள்
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படும். இது தற்போதைய பிற்பகல் 1:30 மணியிலிருந்து 30 நிமிடங்கள் அதிகமாகும்.

திருத்தப்பட்ட அட்டவணை, நீண்ட 50 நிமிட நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொரோனா தொற்றுநோய் போன்ற முந்தைய இடையூறுகளால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |