300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை! ரணில் அதிரடி
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
New Gazette
By Vanan
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்


