அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா...! வெளியானது தகவல்
சிறிலங்கா (Sri Lanka) அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அண்மை நாட்களில் அதிகளவான போலி செய்திகள் வெளியாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அவை அனைத்தும் சில தரப்பினரின் பகல் கனவுகள் எனவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
போலி செய்திகள்
நாடாளுமன்றத்தை கலைப்பது, அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பது, பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அண்மை நாட்களில் அதிகளவான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் உரிய காலத்தில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தேர்தல் ஆணையாளரால் தீர்மானிக்கப்படும் திகதியில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படுமென அமைச்சரவையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |