அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு - சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி!
United States of America
Crime
World
By Pakirathan
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின், டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிதாரி பிரயோகத்தில் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தினால், வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியையும் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்
பலியானவர்களில் சிறுவர்கள் சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளநிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி