விமான இயந்திரத்திற்குள் சிக்கி ஊழியர் பலி - அமெரிக்காவில் சம்பவம்
United States of America
Accident
Aircraft
Texas
By Beulah
அமெரிக்காவில் விமான இயந்திரத்திற்குள் (என்ஜினுக்குள்) சிக்கி விமான நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
லொஸ் ஏஞ்சல்சில் இருந்து சென் அன்டோனியோக்கு வந்த அமெரிக்காவின் டெல்டா விமானம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் 1111 விமானம், அன்டோனியோ விமான நிலையத்தில் தரையிறங்கி, விமான நிலையத்தின் வாயிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், விமானத்தின் ஓர் இயந்திரம் சுழன்று கொண்டிருக்கவே விமான ஊழியர் ஒருவர், மேற்படி விமான இயந்திர சுழல்வினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
