நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு!
நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy Devasthanam) ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (10.02.2025) காலை இடம்பெற்றது.
தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.
நல்லூர் கந்தசுவாமி
அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம்.
அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்படும்.
இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபாக பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறது. இப்புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/a3954fe5-41b8-4834-bef5-df5a001ada3c/25-67a9d862032a2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4dea841b-71a9-4892-bed4-8af0e26e8918/25-67a9d8627ee32.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cb6a1d72-4ebe-4b78-89f0-5a8ed19fbc98/25-67a9d86302754.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c000185e-9595-48a3-b5df-b66f99d9e02a/25-67a9d86380335.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/13c8c902-dd5d-4ffb-8ca8-af8451bccd8b/25-67a9d8640ba14.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)