யாழில் தந்தை செல்வாவின் 46 ஆவது நினைவு தின நிகழ்வு
Jaffna
By Vanan
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்(ஈழத்துக் காந்தி, மூதறிஞர்) அவர்களின் 46 ஆவது நினைவு தின நிகழ்வு நாளை(26) புதன்கிழமை இடம்பெறவிருக்கிறது.
இந்த நிகழ்வில் நினைவுத்தூபியும் திரை நீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
நிகழ்வுக்கான அழைப்பு
தெல்லிப்பழை சேமக்காலையில் (வைத்தியசாலை வீதி, தெல்லிப்பழை) மாலை 4 மணிக்கு இதற்கான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு நிலை பேராசிரியர் சு. ஜெபநேசனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை நிதியம் அன்புடன் அழைக்கிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி