காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை :காதலி சிக்கினார்
தனது காதலனுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த காதலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, சப்-இன்ஸ்பெக்டர் எம். தும்மலசூரிய விலத்தாவ வீதியில் இளைஞன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்கிடமான யுவதியை காவல்துறை அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
காதலன் தப்பியோட்டம்
மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிடுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டதையடுத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், காதலியை கைவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் யுவதியை சோதனையிட்டபோது, அவரிடம் ஏராளமான ஹெரோயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மாதம்பை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய போது, காவல்துறையை தவிர்த்து சென்றது தனது காதலன் எனவும், அவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், விநியோகத்தில் ஈடுபட்டவர் எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

யுவதியின் தாயார் சில காலங்களுக்கு முன்னர் இவர்களை விட்டு பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல் துறையினர் தடுப்புக் காவலில் வைத்து அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று வந்தனர். மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்