மனிதன் நீண்டகாலம் வாழ -உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஆய்வு முடிவு
மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்காக பல்வேறு முயற்சிகளை நாளாந்தம் செய்கின்றமை கண்கூடு.
அந்தவகையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்த உண்மை ஒன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன்படி மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 5000 அடி நடந்தாலே போதும் என்பதே அந்த ஆய்வின் முடிவாகும். முந்தைய அறிக்கைகளின்படி, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு
இந்த புதிய ஆய்விற்கு 226,000 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தினமும் 4,000 அடி நடைபயிற்சி செய்பவர், குறிப்பிட்ட வயதை எட்டுவதற்கு முன்பே இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு மனிதன் தினமும் 2300 அடி நடந்தாலே போதும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், நடைபயிற்சியின் அளவு அதிகரிக்கும்போது, மனித உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு 1,000 அடிக்கும்
அதன்படி, 4,000 அடியில் இருந்து 20,000 அடியாக அதிகரிக்கும் ஒவ்வொரு 1,000 அடிக்கும் ஒருவர் இளமையிலேயே இறப்பதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு என்கிறார்கள்.
இதனால், 60 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரும் நடைபயிற்சி மூலம் அனுபவிக்கும் பலன்களின் அளவு அதிகம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் படி உலகில் வருடாந்தம் 3.2 மில்லியன் பேர் சரியான நடவடிக்கைகளில் ஈடுபடாத காரணத்தினால் உயிரிழப்பதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
உலகில் ஒவ்வொரு ஆண்டும் இறப்பிற்கு நான்காவது முக்கிய காரணம் மனிதனின் செயலற்ற தன்மை என தெரிவிக்கப்படுகிறது.