100 ஆண்டுகள் பழமையான சட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு
நாட்டில் நடைமுறையிலுள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதுடன், புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு, முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான புதிய சட்டம், கணக்கியல் மற்றும் கணக்காய்வுக் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்கள், ஏற்றுமதியாளர்களுக்கான ஒரே இடச் சேவை முறைமை ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |