காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் - இளைஞன் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
நுவரெலியாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய தலையிட்ட காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா வசந்த கால திடலில் நேற்று (22) இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாகொல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை

ஏனைய சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (23) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி