பொருட்களை திருடி கிணற்றில் தவறி விழுந்த திருடன் - மடக்கி பிடித்த ஊர் மக்கள்
Sri Lanka Police
Crime
By pavan
அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கைது செய்த காவல்துறையினர்
திருடன் பணத்தையும் பொருட்களையும் திருடும் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் விழித்துக்கொண்டதாகவும் அதனையடுத்து திருடன் தப்பிச்சென்ற போது வீட்டின் பின்புறம் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அலவ்வ காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் அங்கு சென்ற காவல்துறையினர் ஏணியை வைத்து திருடனை மீட்டெடுத்து கைது செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி