இஸ்ரேலின் இலக்கு இதுதான் : திட்டவட்டமாக கூறிய பிரதமர் நெதன்யாகு
Israel
Israel-Hamas War
Gaza
By Jaso
ஹமாஸ் அமைப்பை அதிகாரபீடத்தில் இருந்து அழிப்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹமாசுடன் நடைபெறும் யுத்தம் இருட்டுடன் நடத்தப்படும் யுத்தம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் உரை நிகழ்த்திய அவர், ஹமாசை ஹிட்லரின் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
75 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் யுத்தம்
75 ஆண்டுகளுக்கும் மேலாக யூதர்களின் சுதந்திரத்திற்கான யுத்தம் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலேம் நகரங்களில் தொடர்ந்து சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் பதற்றமான சூழல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்