இதுவே கடைசி முறை - ஹிருணிகா வழக்கில் நீதிபதி அறிவிப்பு

Colombo Sri Lanka Magistrate Court Hirunika Premachandra
By Sumithiran Nov 16, 2022 05:01 PM GMT
Report

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இடம்பெறும் என்றும் சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்படுவது இதுவே கடைசி முறை என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, இன்று (16) அறிவித்தார்.

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் வைத்து இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையின்போதே நீதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

கடைசி முறையாக சாட்சிய விசாரணை 

இதுவே கடைசி முறை - ஹிருணிகா வழக்கில் நீதிபதி அறிவிப்பு | This Is The Last Time Judge S Hirunika Case

அதிகுற்றப்பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ மன்றில் கோரி நின்றார்.

இந்த வழக்கின் சாட்சிய விசாரணை 6 வருடங்களாக பிற்போடப்பட்டு வருவதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே, சாட்சிய விசாரணை தினமாக ஜனவரி மாதம் 30ஆம் திகதியை குறித்த நீதிபதி, கடைசி முறையாக சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

 சட்டமா அதிபரால் வழக்கு

இதுவே கடைசி முறை - ஹிருணிகா வழக்கில் நீதிபதி அறிவிப்பு | This Is The Last Time Judge S Hirunika Case

2015ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதியன்று, ஹிருணிகா எம்.பிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞனொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குடன் தொடர்புடைய எண்மர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஹிருணிகா எம்.பி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார். எண்மரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர் (8ஆவது குற்றவாளி) என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரைத் தவிர, குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற ஏழு குற்றவாளிகளுக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதேவேளை, தமது சிரேஷ்ட வழக்குரைஞர் அஷான் பெர்னாண்டோ சுகயீனமடைந்துள்ளதால் மேலதிக சாட்சிய விசாரணைக்காக பிறிதொரு தினத்தை அறிவிக்குமாறு ஹிருணிக்கா சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ஓகஸ்ட் 24ஆம் திகதி மன்றில் அறிவித்தமைக்கு அமைய, நேற்று வரை சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், குறித்த வழக்கின் சாட்சிய விசாரணை கிட்டத்தட்ட 13ஆவது தடவையாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த அமர்வின் போது, திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி