உக்ரைனின் எதிர்பாராத தாக்குதல்: மொஸ்கோவில் மூடப்பட்ட மூன்று விமான நிலையங்கள்
ரஷ்யாவின்(Russia) தலைநகர் மொஸ்கோவில்(Moscow) உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று(10) உக்ரைன்மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தாக்குதல்
அதன்படி, மொஸ்கோ பிராந்தியத்தில் உள்ள டொமோடெடோவோ(Domodedovo), ஜுகோவ்ஸ்கி, (Zhukovsky) மற்றும் ஷெரெமெட்டியோ(Sheremetyevo) சர்வதேச விமான நிலையங்களே மூடப்பட்டுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் மோதல்கள் ஆரம்பமாகிய பின்னர் மேற்கொண்ட மிகப்பெரிய ஆளில்லா விமான தாக்குதல் இதுவாகுமென குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, 32 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அவற்றை சுட்டு வீழ்த்த ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மொஸ்கோவின் ஆபத்தான பகுதி
அத்துடன், தாக்குதல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மொஸ்கோவின் ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ள 03 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆளில்லா விமான தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மற்றுமொரு சர்வதேச விமான நிலையமான ஷெரெமெட்டியோ(Sheremetyevo) விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |