விமான நிலையத்தில் சிக்கிய மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் : மூவர் அதிரடி கைது
சுமார் 45 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மூவர் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து இன்று (14.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேக நபர்கள் மூவரும் பாங்காக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் இன்று (14) காலை இலங்கைக்கு வந்துள்ள நிலையில், சுங்க சோதனைகளைத் தவிர்க்க முயன்றுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களின் பயணப்பொதியினுள் பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 45 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களில் இருவர் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மேலும் சந்தேக நபர்களையும் போதைப்பொருட்களையும் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
