சிஐடியின் வலையில் மேலும் மூன்று நாடாளுமன்ற பிரிதிநிதிகள்
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் (Harshana Nanayakkara) பெயருக்கு முன்னால் கலாநிதி என்ற பெயர் தவறாக குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தின் மேலும் மூன்று பிரிதிநிதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.
சபைத் தலைவர் அலுவலகம் மற்றும் அரசாங்கக் கட்சி பிரதான அமைப்பாளர் அலுவலகத்தின் மூன்று பிரிதிநிதிகள் பின்வருமாறு விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணையத்தளத்தில் தகவல்களை உள்ளிடும் பணிகளில் ஈடுபட்டு வரும் சபை பதிவு அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் பிரசன்ன குமாரசிங்கவிடம் நேற்று (30) இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விசாரணை
அண்மையில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் பெரும் சர்ச்சை எழுந்தது.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் இவ்வாறான தலைப்பைக் குறிப்பிட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்ததாக ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |