எம்முடன் விளையாட வேண்டாம் - எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் ரில்வின் சில்வா
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக் கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம் வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
எமக்கு சவால் அல்ல
கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும் கொழும்பை சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர்.
அவர்களின் நகர்வுகள் எமக்கு சவால் அல்ல. எப்படி போராட்டம் நடத்த வேண்டும் எப்படி பேரணி நடத்த வேண்டும் என செய்து காட்டியவர்கள் நாம்.
குண்டு வெடிப்புக்களால் அதிரும் இந்தியா...! காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்: 7 பேர் பலி
விளையாட வர வேண்டாம்
எனவே 3000 - 4000 பேரை திரட்டி எம்மை மிரட்ட முடியாது. பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்தி காட்டுகின்றோம்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக 5 ஆயிரம் பேரை திரட்ட முடியும் என்றால் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கும் வல்லமை எமது அரசியல் அணிக்கு உள்ளது.
எனவே எம்முடன் விளையாட வர வேண்டாம் என்றார்.