மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவஞானம் சிறீதரன்
தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலானது, நேற்றுமுன்தினம் (14) நடைபெற்றதை தொடர்ந்து, அதன் உத்தியோகபூர்வ முடிவுகள், நேற்று தொடக்கம் வெளியானது.
இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி
அதாவது, 32,833 வாக்குகளை பெற்று அமோக வெற்றிப்பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து, உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனுக்கு (T. Raviharan) முல்லைத்தீவு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தியிருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னி தேர்தல் மாவட்டத்தில் துறைராசா ரவிகரன்,11,215 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |