கொழும்பில் சூடுபிடிக்கும் போராட்டக்களங்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்திற்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு நுழைவதற்கு கோட்டை நீதவான் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத மின்சாரத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றும் உறுப்பினர்கள் அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு, கலுமுவதோர உள்ளிட்ட பல இடங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவானது, ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரச சொத்துக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் சேதம் விளைவிக்கக் கூடும் என கோட்டை கொம்பஞ்சாவீதி காவல்நிலைய ஆணையாளர்கள் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
மேலும், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்க நீதிமன்றம் கடமைப்பட்டிருப்பதால், பேரணியில் கலந்துகொண்ட மக்களை அமைதியாகச் செயல்படுமாறும் அவ்வாறு செய்யாவிட்டால், சட்ட விதிகளின்படி அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி உள்ளிட்ட பிரதான வீதிகள் தடைபடலாம் எனவும், அவ்வாறு நடந்தால் அந்த வீதிகளைப் பயன்படுத்தும் போராட்டத்தில் ஈடுபடாத மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் தேசிய பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.