வடக்கு கிழக்கில் மாபெரும் ஆர்ப்பட்ட பேரணி; அனைத்து தமிழ்த் தரப்புக்கும் அழைப்பு!
வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மனித உரிமைகள் தினமான வருகின்ற 10ம் திகதி வவுனியாவில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுக்கவுள்ளதாக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பட்ட பேரணியில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி
இந்த பேரணியானது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.
இதேவேளை வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடையவுள்ளது.
அனைத்து தமிழ் தரப்புக்கும் அழைப்பு
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து வட கிழக்கில் முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
