அத்தனை அறிவியலையும் மிஞ்சப்போகும் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைக்கும் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.கிறிஸ்மஸ் மரம் போன்று 1 லட்சத்து 31 ஆயிரம் Antennaகளின் தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியாவின் சர்வதேச தளங்கள் இணைந்து 16 நாடுகளின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன்மூலம் அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவர முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2028-ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்படும்போது, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக இருக்கும். இதன் பெயர் எஸ்.கே.ஏ. அதாவது Square kilometer array (சதுர கிலோமீட்டர் தொகுப்பு) ஆகும்.
ஐன்ஸ்டீன் கோட்பாடு
வானியலில் உள்ள பல புதிர்களுக்கு விடையளிக்கும் திறன் கொண்டதாக இது காணப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல சிறு தொலைநோக்கிகளை இணைத்து தொகுப்பாக ஒரு பிரம்மாண்டத் தொலைநோக்கியை உருவாக்குவதே இதன் அடிப்படையாகும்.
தென்னாபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு தொகுப்பாக இந்தத் தொலைநோக்கி செயல்படும். பிரிட்டனில் இதன் தலைமையிடம் செயல்படும். மாபெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் வகுத்தளித்த கோட்பாடுகள் பற்றிய சோதனைகளை மேற்கொள்வதுடன் சூரிய குடும்பத்துக்கு அப்பாலும் ஆய்வுகள் இதன்மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கே.எஸ்.ஏ அமைப்பின் தலைமை இயக்குநர் ஃபில் டயமண்ட் தெரிவிக்கையில் "இது ஒரு 30 ஆண்டு பயணம். முதல் 10 ஆண்டுகளில் கருத்துருக்களும் யோசனைகளும் உருவாக்கப்பட்டன. இரண்டாவது 10 ஆண்டுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் செலவிடப்பட்டன. கடைசியாக கடந்த பத்தாண்டுகளில் விரிவான வடிவமைப்பை உருவாக்குவது, அரசு ஒப்புதல்களைப் பெறுவது, நிதி திரட்டுவது போன்றவை நடந்தன." என கூறினார்.
எஸ்.கே.ஏ இலக்கு
தொலைநோக்கியின் தொடக்கநிலை வடிவமைப்பில், சுமார் 200 பரவளைய Antenna அல்லது Dishes அமைக்கப்படும். இவைதவிர 1,31,000 இரட்டைமுனை கொண்ட Antenna கிறிஸ்மஸ் மரம் போலப் பொருத்தப்படும். லட்சக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் தரவுச் சேகரிப்புப் பகுதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்தக் கட்டமைப்பு மூலம் விண்ணில் உள்ள இலக்குகளை ஆய்வு செய்யும் போது எஸ்.கே.ஏ.க்கு இணையற்ற உணர்திறன் கிடைக்கும்.
இந்த அமைப்பு சுமார் 50 மெகாஹெர்ட்ஸ் முதல் 25 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் வரம்பில் செயல்படும். அலைநீளத்தின் அடிப்படையில் பார்த்தால், இது சென்டிமீட்டர் முதல் பல மீட்டர்கள் வரை காணப்படும். 'பிக் பேங்' எனப்படும் பெருவெடிப்புக்குப் பிறகு சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட சிக்னல்கள் முதல் பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள காஸ்மிக் மூலங்களில் இருந்து வரும் வரும் மங்கிப்போன ரேடியோ சிக்னல்கள் வரை கண்டறிய இந்தக் கட்டமைப்பு உதவும் என கூறப்படுகிறது.
பிரபஞ்சத்தில் மிக அதிகமாக உள்ள தனிமமான hydrogenனின் முழு வரலாற்றையும் கண்டுபிடிப்பது எஸ்.கே.ஏ-இன் முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது."
5,00,000 சதுர மீட்டர் அளவு
#BREAKING: The Australian arm of the world’s largest radio telescope observatory, the SKA-Low telescope, is about to take shape on Wajarri Yamaji Country in remote Western Australia. #SKA @sciencegovau @CSIRO @SKAO @ICRAR Watch: https://t.co/H1xNQKiwVE
— Australian Academy of Science (@Science_Academy) December 4, 2022
இந்தத் திட்டமானது, 2028ஆம் ஆண்டில் 5,00,000 சதுர மீட்டர் அளவிலான தரவுச் சேகரிப்புப் பகுதியைக் கொண்டிருக்கும். ஆயினும் இது 10 லட்சம் சதுர மீட்டர் அல்லது ஒரு சதுர கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தக்கூடியது.
ஆயினும் இந்த அமைப்பில் மேலும் மேலும் நாடுகள் இணைந்து தேவையான நிதியை வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த அமைப்பில் தற்போதைய உறுப்பு நாடுகளாக தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துகல் என்பன அங்கம் வகிக்கின்றன.
சுவிட்சர்லாந்து.
பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
கனடா, இந்தியா, ஸ்வீடன், தென் கொரியா, ஜப்பான் ஆகியவையும் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
